காஸா முனையில் நேற்று இஸ்ரேல் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். காஸா முனையை ஆளுகிற ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலிய திவிரவாதிகளுக்கும் இடையே கடந்த மாதம் போர் மூண்டது. தீவிர யுத்தங்களுக்கு இடையே அவ்வப்போது யுத்த நிறுத்தமும் அமல் படுத்தப்பட்டது.
ஆனபோதும், போர் நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேல் பல தடவை தாக்குதல்களை நடத்தியது. இருப்பினும் அவர்கள் இடையே நிரந்தர யுத்த நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான மறைமுக சமரச பேச்சை எகிப்து முன்னின்று நடத்தியது.
ஆனால் இந்தப் பேச்சு வார்த்தை கடந்த 19 ஆம் திகதி தோல்வி அடைந்தது. இந்நிலையில், காஸாமுனை மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீச்சை தீவிரப்படுத்தி வருகின்றன. ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து தொடர்ந்து ராக்கெட் வீச்சு நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், நேற்று காஸாமுனையின் மத்திய பகுதியில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய திவிரவாதிகள் குண்டுவீச்சு நடத்தியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 அப்பாவி பாலஸ்தீன மக்கள் உயிரிழந்தனர்.
பலியானவர்களில் கணவன், மனைவி, அவர்களது 2 குழந்தைகள் அடங்குவார்கள்.

Post a Comment