மஹிந்தவுக்கு காக்கா பிடிக்கும் தௌஹீத் ஜமாஅத்தின் அரசியல்

Sunday, August 17, 20140 comments


இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும்போக்கு பௌத்த அமைப்புகளுக்கு களம் அமைப்புகளை நீரூற்றி வளர்த்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனா, ஜாதிக ஹெல உறுமய, ராவன பலய, சிஹல ராவய போன்ற அமைப்புகள் நாளாந்தம் திட்டமிட்ட பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக முஸ்லிம்களின் பள்ளிவாசல் தாக்குதல், கலாசார விலுமியங்களுக்கு இடையூறு விளைவித்தல், ஹபாயா மற்றும் ஹிஜாபுக்கு எதிர்ப்பு, ஹலால் தடை, வியாபார நடவடிக்கைளை முடக்கள், முஸ்லிம் பிரதேசத்திங்களில் பாதுகாப்பை இல்லாது செய்தல் என இவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன. இதற்கு மஹிந்த அரசும் பூரண ஒத்துழைப்பு கடும்போக்காளர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றது.


போதாக்குறைக்கு முஸ்லிம் பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கைகளையும் அதிகரிக்கச் செய்துள்ளது. கிழக்கிழங்கையிலும் வடக்கிலும் முஸ்லிம்களின் காணிகள் அரசு அபகரித்து இராணுவத்தை நிறுவி வருகின்றது. கொழும்பில் வீடுகளும் கடைகளும் உடைக்கப்பட்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இப்படி முஸ்லிம்களை மஹிந்த அரசு நசுக்கி வருகின்றது.


இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி பலஸ்தீனுக்கு ஒரு பில்லியன் அமேரிக்க டொலர்களை அன்பளிப்பு செய்து. மத்திய கிழக்கிற்கு பாணி பூசினார். நாட்டுக்குள் காடைத்தனங்கள் நடந்தேர சர்வதேசத்திற்கு நல்ல பிள்ளை என காட்டுவதற்கு இவர் இந்த தொகைகை கொடுத்து மணாலுப்பினார். ஆனாலும் இஸ்ரேல் கொடூரமாக காஸவை தாக்கும் போது இஸ்ரேலுக்கு எதிராக எவ்விதமான கண்டனங்களையும் அவர் தெரிவிக்கவில்லை.


இவ்வாறு ஜனாதிபதி உதவித் தொகை கொடுத்ததற்காக ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பு அவருக்கு நன்றி தெரிவித்து ஊரெல்லாம் போஸ்டர் ஒடடி திறிகின்றனர்.  அளுத்கமயில் காடையர்களால் தாக்கப்பட்ட இடங்களை மீள கட்டியெழுப்ப 50 மில்லியன் தெகையை மாத்திரம் அரசு ஒதுக்கியது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான நிவாரண தொகைகளையும் கொடுக்கவில்லை. பலஸ்தீனில் அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்ப்பட்டபோது உதவிக்கரம் நீட்டியது வரவேற்கவேண்டிய விடயமே. இருப்பினும் அரபு உலகத்தை ஏமாற்ற அங்கு உதவி கொடுத்துவிட்டு நாட்டுக்குள் முஸ்லிம்கள் நசுக்கப்பட்டபோது எவ்வித நிவாரண உதவிகளும் வழங்காத இந்த தௌஹீத் ஜமாஅத் பற்றி என்ன கூறுவது.


ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தால் முஸ்லிம்களுக்கு அடிக்கடி கெட்ட பெயர்தான் மிஞ்சுகிறது. இவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்றால் நேரடியாகவே பிரவேசித்து விடலாம். இப்படி ஈனச் செயல்களில் ஈடுபட்டு பிரபல்யம் தேடி அரசியலுக்கு வர முற்படுவது ஒரு இயக்கத்துக்கு அழகல்ல. அதுவும் 'தௌஹீத்' எனும் ஏகத்துவம் எனும் துயஇஸ்லாமிய சொல்லை தனது அமைப்பிற்கு பெயராக வைத்திருக்கின்றனர். தௌஹீத் என்ற பெயரை அவர்கள் வைத்திருப்பதற்கு முதலில் தடை விதிக்க வேண்டும்.



Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham