மீராவோடை குடம்பஸ்தர் கொலை: மூன்று பெண்கள் கைது
Sunday, August 24, 20140 comments
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடை பவுசி மாவத்தையில் (எல்லை வீதியில்) குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (23.08.2014) இரவு 06.30 மணியளவில அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
காவத்தமுனை பாடசாலை வீதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான அசனார் நாசர் (வயது 38) என்பரே ஐந்து பேர் சேர்ந்து தாக்கியதில் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக உயிர் இழந்தவராவார்.
மீறாவோடை பவுசி மாவத்தையில் (எல்லை வீதியில்) உள்ள தனது அம்மம்மாவின் வீட்டுக்கு வந்து விட்டு அருகில் உள்ள சில்லறைக்கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற போதே குறித்த சந்தேக நபர்கள் கோடாரிப் பிடியால் தாக்கியதில் இவர் உயிர் இழந்துள்ளார் என்று ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
மூன்று பெண்களும் இரண்டு ஆண்களுமாக ஐந்து பேர் சேர்ந்து தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்ததையடுத்தே குறித்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களான ஆண்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மரணம் அடைந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment