மேல் மாகாண சபைக்கு உட்பட்ட பிரதேசமான அளுத்கமயில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் மேல்மாகாண சபையில் எழுப்பப்பட் கேள்விக்கு பதிலளிக்கும்போது அதற்கு சம்பந்தமுமில்லை என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளித்துள்ளார்.
மேல்மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அளுத்கம விவகாரம் தொடர்பில் ஆகஸ்ட் மாதம் முதலாம் அமர்வின்போது கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை பதிலளித்த முதலமைச்சர் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றே பதிலளித்துள்ளார். மேல்மாகாண சபைக்குட்பட்ட அளுத்கம சம்பவத்திற்கு குறித்த சபை பதிலளிக்க வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment