அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஆயுதங்களை தேடும் நடவடிக்கை
Thursday, July 3, 20140 comments
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் அலு வலகம் தெரிவித்தது.
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் பல கடைகள், வீடுகள் என்பன நாசமானதோடு பலர் காயமடைந்தனர் நாசகார வேளைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பெற்றோல் குண்டுகள், கைக்குண்டுகள், இரும்பு தடிகள் மற்றும் ஆயுதங்களை பொலிஸ் நிலையங்களிலோ பொதுவான இடமொன்றிலோ கையளிக்குமாறு பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் கடந்த வாரம் அறிவித்தனர்.
உரிய காலத்தினுள் ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்ப டாது எனவும் பொலிஸார் அறிவித் திருந்தனர்.ஆயுதங்களை கையளிக்க வழங்கப்பட் டிருந்த காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment