யாழ்.பல்கலைக்கழக முஸ்லிம் மாணவன் ஒருவர் மீது சக மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் . மருதனார்மடம் நுண்கலைப்பீட மாணவன் முஹமத் அர்சாத் (வயது-23) மீது நேற்று
சகமாணவர்கள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது குறித்த மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணமென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
Post a Comment