தர்கா நகரில் பிக்கு தாக்கப்பட்டரா? - உண்மையை சொல்கிறார் அவரின் சாரதி

Sunday, July 6, 20140 comments


வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் அளவுக்கு, தர்கா நகர், குறுந்துவத்தை சிறீ விஜயாராம விகாரையின் விகாரதிபதி அயகம் சமித்த தேரருக்கு பாரதூரமாக எவ்வித தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஒரே ஒரு சிறு அடி ஒன்று அவர் மேல் பட்டதாகவும், தர்கா நகர் வன்முறைகளுக்கு வித்திட்ட சம்பவத்தில் தேரரின் வேனை செலுத்திய சாரதி குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் குழுவொன்று அயகம சமித்த தேரரை சந்திப்பதற்காக கடந்த சனியன்று  பத்திராஜகொடை, குறுந்துவத்தை, சிறீ விஜயாராம விகாரைக்கு சென்றபோதே குறித்த சாரதி இதனை அக்குழுவினரிடம் குறிப்பிட்டார். ஊடகவியலாளர் குழு சென்ற போது அங்கு விகாராதிபதி இருக்கவில்லை. அன்னதான நிகழ்வு ஒன்று தொடர்பில் அவர் சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்தே களவானை பிரதேசத்தை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட தேரரின் வேன் சாரதியான இளைஞர் மேற்கண்ட தகவலைக் குறிப்பிட்டார்.

கடந்த பொஸன் போயா தினத்தன்று தானே குறித்த வெள்ளை நிற வேனை செலுத்தியதாக குறிப்பிட்டு அந்த வேனையும் இதன் போது ஊடகவியலாளர்களுக்கு காண்பித்த அந்த சாரதி, சம்பவம் தொடர்பிலும் விபரித்தார்.

தாம் சென்றுகொண்டிருந்த போது பாதையின் குறுக்காக நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை அப்புரப்படுத்துமாறு கோரிய போது தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதனை தடுக்க முனைந்த தேரர் மீதும் ஒரு அடி விழுந்ததாகவும் இதன் போது அவர் குறிப்பிட்டார்.
எனினும் தாக்குதலின் போது தான் வேனில் இருந்து இறங்கவில்லை எனவும் தேரரும் வேனின் முன் பக்க ஆசனத்திலேயே அமர்ந்திருந்ததாகவும் இதன் போது சுட்டிக்காட்டிய அவர் மேலதிகமாக கருத்துக்கள் எதனையும் கூற மறுத்துவிட்டமைக் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் தேரருக்கு வைத்தியசாலைக்கு செல்லும் அள்வுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இதன் போது சாரதி குறிப்பிட்டார். யாரேனும் தேரரி போய் வைத்த்யசாலையில் தங்குமாறு கோரினரா என இதன் போது ஊடகவியலாளர்கள்  சகஜமாக கேட்க, சிரித்தவாரே அது தொடர்பில் தனக்கு தெரியாது என்றார்.

முன்னதாக தேரர் ஒரு வைத்திய சாலைக்கு சென்ரு அங்கு தங்க முற்பட்ட போது சட்ட வைத்திய அதிகாரி தேரருக்கு எதுவும் இல்லை என்ரு குரிப்பிட்டதாகவும் அதனை தொடர்ந்தே அவர் நாகொடை வைத்தியசாலைக்கு சென்று தங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.
எவ்வாறாயினும் தேரர் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி வழங்கியுள்ல அறிக்கையில் தேரர் தாக்கப்பட்டுள்ளமைக்கன அறிகுரிகள் கணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் பின்னர் தேரர் செய்ததாக கூறப்படும் முறைப்பாட்டுக்கமைய அவர் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் முஸ்லிம் இளைஙர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்த்தக்கது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham