இலங்கையில் அல்கைதா இருப்பதாக கூறுபவர்கள் நிரூபித்து காட்டட்டும் - சூறா சபை
Monday, July 7, 20140 comments
இலங்கையில் அல் கய்தா இயக்கம் இயங்கி வருவதாக குற்றம் சுமத்துபவர்கள் முதலில் அதை நிரூபித்து காட்ட வேண்டும். பின்னர் அது குறித்து பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய சூரா பேரவை தெரிவித்துள்ளது.
முஸ்லிம் மக்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதன் மூலம் எவ்வித பயனும் கிடையாது என குறிப்பிட்டுள்ளது. முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கும் தரப்பினர் அல் கய்தா இயக்கம் குறித்து பொலிஸ் மா அதிபரிடமே முறைப்பாடு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.
முஸ்லிம் மக்கள் ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒடுக்குமுறைகளினால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான பின்னணியில் தற்போது பொதுபல சேனா இயக்கம் முஸ்லிம்களை ஒடுக்க முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் பேருவளை, வெலிபன்ன மற்றும் அலுத்கம பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளினால் முஸ்லிம் மக்களுக்கு 5 பில்லியன் ரூபா பொருளாதார நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய சூரா பேரவையின் தலைவர் தமீம் மஹ்மூட் தெரிவித்துள்ளார்.
அல் கய்தா, லக்ஸர் ஈ தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் இலங்கையின் எந்தவொரு பகுதியிலேனும் இடம்பெற்றால் அது குறித்து ஆதாரங்களுடன் துரித கதியில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு முறைப்பாடு செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட முடியும் எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பொலிஸார், பாதுகாப்புப் படையினர் சிங்களப் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், என்ன காரணத்திற்காக அல் கய்தா குறித்து முறைப்பாடு செய்ய சில அமைப்புகள் அஞ்சுகின்றன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தரிபுபடுத்தப்பட்ட போலி குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் மக்களின் மீது சுமத்தாது, ஆதாரம் இருந்தால் சட்ட ரீதியாக முறைப்பாடு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment