முஜிபுர் ரஹ்மானின் அலுவலகத்தின் முன் CID
Monday, June 23, 20140 comments
மேல் மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் முக்கியஸ்தருமன முஜிபுர் ரஹ்மானின் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தின் முன்பாக இன்று காலை முதல் குற்றப் புலனாய்வு பிரிவுப் பொலிஸார் நிலைகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் எம்மை தொடர்புகொண்டு தெரிவித்த முஜிபுர் ரஹ்மான், இன்று காலை முதல் குற்றப்புலனாய்வு பிரிவினர் எமது அலுவலகத்திற்கு முன்பாக இருக்கின்றனர். நீண்ட நேரத்திற்கு பின் அவர்களிடம் இது தொடர்பில் போய் விசாரித்தேன் என்றார்.
இதேவேளை அங்கிருந்த பொலிஸாரிடம் இது தொடர்பில் நான் நேரடியாகவே சென்றி இங்கு தரித்திருப்பதற்கான காரணத்தை வினவினேன். எமது அலுவலகத்திற்கு பாதுகாப்பளிப்பதற்காக இருப்பதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மேலும் 'என்னை கைது செய்யப்போகிறீர்களா' எனவும் நான் வினவினேன். அதற்கு இல்லை என சீ.ஐ.டியினர் மறுத்தனர். அத்தோடு தற்போது நாம் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர் என்றார் மேல்மாகாண சபை உறுப்பினர்.
இவ்விடயம் தொடர்பில் தான் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம் தெரிவித்ததாகவம், அவர் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் இது தொடர்பில் வினவுவதாகவும் தெரிவித்தாக முஜிபுர் ரஹ்மான் நம்மவனுக்கு தெரிவித்தார்.
அத்தோடு தற்போது தனக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் இல்லாத நிலையில் இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் இருப்பது பல விதமான சந்தேகங்களை தோற்றுவிப்பதாகவம் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பினால் கடந்த வியாழக்கிழமை நாடுமுழுவதும் கடையடைப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதன்போது பிரபல வர்த்தக நிலையம் ஒன்றை மூடுமாறு முஸ்லிம் இளைஞர்கள் அச்சுறுத்தியதாக கூறி 5 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் முக்கியஸ்தர் முஜிபுர் ரஹ்மானின் அலுவலகத்தின் முன் குற்றப்புலனாய்வு பிரிவினர் இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment