கேகாளை மாவட்டம் ருவென்வெல்ல தொகுதியில் உள்ள கண்ணதோட்டை முஸ்லிம் கிராமத்தில் பாடசாலை ஒன்று அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிக்குகள் அடங்கிய குழுவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர் சப்ரகமுவ மாகாணசபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நிஹால் பாறூக் தெரிவித்தார்.
கண்ணதோட்டை சுலைமானிய கல்லூரி ஆயிரம் பாடசாலை திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டதையடுத்து அங்கு ஆரம்ப பிரிவு இல்லாது செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரம்ப பிரிவு மாணவர்கள் தூர பிரதேசங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதையடுத்து தற்போது கணிஷ்ட பிரிவு நூராணியா பள்ளிவாசல் கட்டடத்தொகுதியில் இடம்பெற்று வருகின்றது. தொடர்ந்தும் அங்கு பாடசாலையை நடத்துவது பொருத்தமில்லாததன் காரணமாக அரசின் காணியொன்றில் புதிய பாடசாலை அமைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், வெளிப்பிரதேசத்தில் இருந்து வந்த பிக்குகள் அட்ங்கிய குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கும் கடும்போக்கு அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக நிஹால் பாறூக் மேலும் தெரிவித்தார்.

Post a Comment