கொழும்பு-2, கொம்பனி வீதியிலுள்ள நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் பொதுபல சேனாவைச்சேர்ந்த உறுப்பினர்கள், அத்துமீறி நுழைந்து வட்டரெக்க விஜித்த தேரரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம், முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆனை அவமதிக்கும் விதமாக கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் ஜூலை 7 ஆம் திகதி குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் கோட்டை நிதிவான் திலிண கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வைத்து 'நாயே' என்று தன்னை அவமதித்ததாக வட்டரக்க விஜித்த தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மைதிரி குணரத்ன நீதவானின் கவனத்திற்கு இன்று கொண்டுவந்தார்.
அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு நீதவான் சட்டத்தரணிக்கு பணித்தார். இதேவேளை நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் தாம் வெளியில் வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தம்மை மிகவும் கேவலமாக திட்டியதாக சட்டத்தரணிகளான மைத்ரீ குணரத்ன மற்றும் சிராஸ் நூர்தீன் ஆகியோர் நீதிவானிடம் முறையிட்டுள்ளனர். எனினும் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடுமாறு நீதிவான் சட்டத்தரணிகளுக்கு தெரிவித்த நிலையில் அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் சட்டத்தரணிஉகள் இருவரிடமும் வாக்கு மூலம் பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

Post a Comment