கிராண்ட்பாஸில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் பலி
Sunday, June 29, 20140 comments
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு பிரயோகிக்கப்பட்டுள்ளதால் இருவர் பலியாகியுள்ளனர்.
கிராண்ட்பாஸ் ஹெண்ட்ரியாவத்த பகுதியிலேவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், மோட்டார் சைக்கிலில் வந்தவர்களே துப்பாக்கி சூடு நிகழ்த்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று இரவு 8.௪௫ மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பிரதேச வாசி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மற்றவர் மற்றும் காயமடைந்த இருவர் பற்றிய விபரங்களும் வெ ளியிடப்படவில்லை.
இச்சம்பவம் இடம்பெற்ற போது, ஹென்றியாவத்த வீதியிலுள்ள மக்கள் தேவாலய கிரிகைக்காக சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கிராண்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment