முஸ்லிம்களுக்கு இம்முறை ரமழான் இல்லை - தர்கா நகரில் ரணில்
Sunday, June 29, 20140 comments
கடும்போக்காளர்களின் செயற்பாடுகள் காரணமாக அச்சமடைந்துள்ள முஸ்லிம்களுக்கு இம்முறை நிம்மதியான முறையில் நோன்பை நோற்க முடியாதுள்ளது. எனவே இம்முறை முஸ்லிம்களுக்கு ரமழான் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.
இன்று (29) அளுத்கம, தர்கா நகர், பேருவளை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னர் மக்கள் சந்திப்பொன்றையும் எதிர்கட்சி தலைவர் மேற்கொண்டிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த மக்கள் சந்திப்பின்போதுபோது பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஸிம், எம்.எச்.ஏ.ஹலீம், அஜித் பி. பெரோரா மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இப்திகார் ஜெமீல், பைரூஸ் ஹாஜியார், மரிகார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Post a Comment