அளுத்கம மற்றும் பேருவளை பிரதேச வன்முறைகளுக்கு சர்வதேசத்தின் சதியே காரணம்
எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குகளை குறைப்பதற்காகவே இவை
மேற்கொள்ளப்படுவதாகவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்
ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.
விகாரை, பள்ளிவாசல்களுக்கு தாக்குதல் நடத்தி சிங்கள - முஸ்லிம் மக்களிடையே
மோதலை எற்படுத்துவது சர்வதேச நாடுகளின் சதி நடவடிக்கையே என அவர்
குறிப்பிட்டார்.
இதன் மூலம் இலங்கையினுள் பயங்கரவாதம் ஏற்பட்டுள்ளதாக காண்பித்து, இந்த
சம்பவத்தை ஜெனீவா மனித உரிமை சபைக்கு எடுத்துச் செல்ல
திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இதற்கு முன்னர் இந்த நாட்டினுள் மோதல் நிலை இருக்கவில்லை எனவும் முஸ்லிம்
மக்கள் அரசாங்கத்தின் நம்பிக்கையை பெற்றிருந்தனர் எனவும் அதாவுல்லா
குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேசம் சதி
Tuesday, June 24, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment