முஸ்லிம்கள் அனைவரும் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாட்டை அறிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஏனெனில் அவற்றை அறிந்துகொண்டால் மாத்திரமே சூழலுக்கு ஏற்றாற்போல் நடந்துகொள்ள முடியும்.
எல்லோரும் குற்றவாளிகள் அல்ல
நேற்று அல்லது கடந்த 2011 ஆம் ஆண்டு அநுராதபுரம் தர்கா தகர்ப்பு, 2012 ஏப்ரல் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல், 2013 ஹலால் எதிர்ப்பு, 2013 ஆகஸ்ட் கிராண்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் அளுத்கம-தர்காநகர்-பேருவளை கலவரம் என மூன்று வருடத்திற்கும்மேலாக முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாடு தொடர்கின்றது. இதற்கு ஒட்டுமொத்த சிங்கள மக்களோ அல்லது பௌத்தர்களோ காரணமானவர்கள் அல்லா. அப்படி நாங்கள் தப்புக்கணக்குபோட்டிருந்தால் அந்த நிலைப்பாட்டிலிருந்து நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் முஸ்லிம்கள் மீது பொருளாதார போட்டியை மையபடுத்தி அரசியல் இலாபம் கொண்ட ஒரசில இனவாத தீவிரவாதபோக்குடையவர்களே இச்செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களுக்கு முஸ்லிம்களை வம்புக்கு இழுத்து தாக்குவதே நோக்கமாக இருக்கின்றது. இதனை எம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
வீனாக ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் குற்றவாளிகளாக பார்க்கவேண்டாம். சிங்கள மக்கள் அப்பாவிகளே. அவர்களில் ஒருசிலரை இனவாத தீவிரவாதிகள் ஏவிவிடும்பணிகளை மேற்கொண்டனர். இனவத தீவிரவாதிகளின் போக்கே இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமாகும்.
வெளிநாடுகளில் உள்ள நண்பர்களுக்கு....
இணையத்தளம் பாவிக்கும் வெ ளிநாடு மற்றும் உள்நாட்டிலுள்ள நண்பர்கள் அதிகம் கவனமாக இருக்க வேண்டும். இனவாதிகளும் அரசும் எமது செயற்பாடுகளை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றன. எனவே facebook, twitter உள்ளிட்ட சமூக இணையத்தளங்களில் பதிவு செய்யும் மற்றும் பகிர்ந்துகொள்ளும் விபரங்கள் பற்றி அவதானமாகவே இருங்கள். அத்தோடு இனவாதம்பிடித்த பெளத்த பிக்களின் படங்களை பகிர்ந்துகொள்வதை தவிர்ந்துகொள்ளுங்கள். அநாவசியமாக இனவாதிகளின் எதிர்ப்பார்ப்பை நாம் பூர்த்திசெய்பவர்களாக இருக்கக் கூடாது. நாட்டில் வாழும் முஸ்லிம்களின் இருப்பு பற்றி கொஞ்சம் சிந்தித்க்க வேண்டும்.
அவசர உதவிகள் தேவை
தற்போது பேருவளை, அளுத்கமை-தர்காநகர், துந்துவ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பல சேதங்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக உடற்காயம், சொத்துசேதம், இருப்பிட இழப்பு, தொழில் இழப்பு என அடுக்கிக்கொண்டேசெல்லலாம். இத்தருனத்தில் அம்மக்களுக்கு உதவுவது தொடர்பில் ஆராயுங்கள்.
Post a Comment