ஹக்கீமின் செயற்பாட்டில் தவறெதுவுமில்லை : அமைச்சர் வாசு
Monday, June 30, 20140 comments
முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து தெளிவுபடுத்துவதில் எவ்விதமான தவறும் இல்லையெனத் தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சட்டக்கல்லூரி பரீட்சைகள் ஆங்கிலத்தில் மட்டும் இடம்பெறுவதை நான் எதிர்க்கின்றேன். இப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை அமைத்த சர்வதேச விசாரணைக்குழுவை எதிர்க்கின்றோம். எமது பாராளுமன்றத்திலும் இதற்கெதிராக பிரேரணையை நிறைவேற்றினோம். ஏனென்றால் இவ்வாறான விசாரணை இலங்கையின் இறையாண்மையை மீறுவதாகும்.
ஆனால், தனது சமூகம் சார்ந்த பிரச்சினைகள் பாதுகாப்பு தொடர்பாக அமைச்சர் ஹக்கீம் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து தெளிவுபடுத்துவதில் எவ்விதமான தவறும் இல்லை.
அதற்கு அமைச்சருக்கு உரிமை உள்ளது. உதாரணமாக தொழிலாளர்களுக்கு எதிராகஅரசாங்கம் அடக்கு முறையை கடைப்பிடிக்குமானால் அரசில் அமைச்சராக பதவி வகிக்கும் நான் அதனை தடுக்க முயற்சிகளை மேற்கொள்வேன்.ஆனால் அது வெற்றி பெறவில்லையானால் சர்வதேச ரீதியாக அப்பிரச்சினையை கொண்டு செல்வேன்.
அதுமட்டுமல்லாது உலகில் தொழிலாளர்களுக்கான அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவேன். அதற்கு எனக்கு உரிமையுள்ளது. அரசிற்குள் இருந்தாலும் பல்வேறு விடயங்களில் முரண்பாடுகள் உள்ளன. சட்டக்கல்லூரிசட்டக்கல்லூரி பரீட்சைகள் சிங்களத்திலும் தமிழிலும் நடத்தப்படுவது இரத்துச் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படுமென தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனை கடுமையாக எதிர்க்கின்றேன். அரசாங்கத்திற்கும் எனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளேன்.
இது கைவிடப்படா விட்டால் இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள சர்வதேச ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப் பேன் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்
கார தெரிவித்தார்.
Related Articles
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment