ஊரடங்கு சட்டம் 4 மணி நேரத்திற்கு தளர்த்தப்பட்டது: நிலமை ஓரளவு சுமூகம்
Tuesday, June 17, 20140 comments
பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 08 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை 04 மணித்தியாலங்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட பதட்ட நிலையைத் தொடர்ந்து இப் பிரதேசத்தில் கடந்த 15ஆம் திகதி மாலை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இதன் பின்னதாக பேருவள பிரதேசத்திலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இப் பிரதேசங்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இன்று (17) பிற்பகல் 12 மணி முதல் இப் பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்நிலையில் குறிப்பிட்ட பிரதேசங்களில் நிலமை ஓரளவு சுமூகமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, பேருவளை ஜமிஆ நளீமியா மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment