யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறை மீது இன்று (20) காலை இனம் தெரியாத நபர்களினால் கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் மாணவர் பொது மண்டபத்தில் உள்ள அறை ஒன்று முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் மீதே கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.
பூட்டிய அறையின் மீது சிறு பைகளில் கொண்டு வந்த கழிவு எண்ணையே அவர்கள் வீசி சென்றுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இச் சம்பவம் தொடர்பில் மாணவர்களினால் பல்கலைகழக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களை கண்டித்து நேற்றைய தினம் மதியம் யாழ். பல்கலைகழக சமூகத்தால் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment