ஃபஷன் துறையில் 20 ஆண்டுகள் பூர்த்தி ஃபஷன் பக்கின் மாபெரும் கொண்டாட்டங்கள்

Sunday, June 15, 20140 comments


நாடெங்கிலும் 17 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள இலங்கையின் முன்னணி சில்லறை ஆடை விற்பனையாளர்களான  ஃபஷன் பக், ஃபஷன் துறையில் காலடி எடுத்து வைத்த 20 ஆவது ஆண்டுப் பூர்த்தியை ஜூன் மாதம் 21 ஆம் திகதி கொண்டாடுகின்றது. இதனை முன்னிட்டு மாபெரும் கண்கவர் விழாவொன்று கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் அமைந்துள்ள ஃபஷன் பக் காட்சியறையில் இடம்பெறவுள்ளது. பிரபல திரைப்பட நடிகை யசோதா விமலதர்மா மற்றும் ஊடக ஆளுமையாளர் தனு ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொள்வர். அதேவேளை ஃபஷன் பக்கின் வாடிக்கையாளர்கள் ஜூன் மாதம்  10 இறுதி வரை நீடிக்கும் சந்தோஷ தருணம் விசேட தள்ளுபடியிலும் பங்குகொள்ளும் வாய்ப்புக் கிட்டுகின்றது. இதன் மூலம் வார நாட்களில் தினமும் காலை 9.30 முதல் மதியம் 12 மணி வரை மேற்கொள்ளப்படும் பணக்கொடுக்கல் வாங்கல் அனைத்துக்கும் 10% விலைக்கழிவு வழங்கப்படுகின்றது.

ஃபஷன் பக் 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 7 பேர் கொண்ட  குழுவொன்றுடன் பண்டாரவளையில் 500சதுர அடி விஸ்தீரணங் கொண்ட கடையுடன் ஃபஷன் பக் தனது வர்த்தகத்தை ஆரம்பித்தது. இதன் நிறுவுனர்களான திரு ரிஸால், அஷான் சுபைன் மற்றும் ஏ.ஸீ.எம். சாதீக் ஆகியோரின் அயராத முயற்சியினால் இன்று ஃபஷன்பக் நாடெங்கிலும் 17 கிளைகளைக் கொண்டு பலரது வீடுகளிலும் உச்சரிக்கப்படும் நாமமாகவுள்ளது. ஃபஷன் பக்கில் ஆண்களும் பெண்களுமாக 1200 இலங்கையர்கள் பணி புரிகின்றனர். ஃபஷன் பக்கின் ஊழியர்கள் இலங்கையின் பல்வேறுபட்ட சூழல்களை இனங்களைச் சேர்ந்தவர்கள். எனவே ஃபஷன் பக் இலங்கையின் உண்மையான கூட்டாண்மை நிறுவனம் என்ற நிலையை எட்டியுள்ளது.

சகல காட்சியறைகளிலும் பெண்கள் ஆண்கள் மற்றும் சிறார்களுக்கான ஆடைத் தெரிவுகள் உள்ளாடைகள் கீழைத்தேய மேலைத்தேய ஆடைகள் என்பனவற்றை தள்ளுபடி விலைகளில் பெற்றுக்கொள்ளலாம். அதேவேளை சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சேலைகள் குர்தீஸ்கள் மற்றும் ஷல்வார்கள் என்பனவற்றோடு கைப்பைகள் காலணிகள் மற்றும் இன்ன பிற தேர்வுகளும் பல்வேறுபட்ட வடிவமைப்புகளிலும் நிறங்களிலும் இங்கு கிடைக்கின்றன.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham