தோலிலிருந்து விந்தணுக்களை உற்பத்தி செய்யும் புரட்சிகர தொழில்நுட்பம்
Monday, May 5, 20140 comments
பரம்பரை ரீதியான பாதிப்புக்குள்ளாகி இனவிருத்தி ஆற்றலை இழந்த ஆண்களின் தோலிலிருந்து விந்தணுக்களை உருவாக்கும் ஆரம்ப கட்ட செயன் முறையொன்றை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க ஸ்டோன் போர்ட் பல்கலைக்கழகத்தின் மூலவுயிர் கல உயிரியல் மீள் விருத்தி மருத்துவ நிறுவகத்தைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி ரெயிஜோ பெரா தலைமையிலான குழுவினரே இந்த அரிய கண்டு பிடிப்பை செய்துள்ளனர்.
தோல் கலங்களிலிருந்து நேரடியாக விந்தணுக்களை விருத்தி செய்வதற்கான இந்த ஆரம்பக் கட்ட செயன்முறையானது விந்தணுக்களின் விருத்தி தொடர்பில் ஆய்வை மேற்கொள்ளவும் இனவிருத்தி ஆற்றலற்றவர்களுக்கு சிகிச்சைகளை மேற்கொள்ளவும் வழி வகை செய்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பரம்பரை பிரச்சினைகள் காரணமாக 10 சதவீதம் முதல் 15 சதவீதமான ஜோடிகள் இனவிருத்தி ஆற்றலற்ற நிலைமைக்கு உள்ளாவதாகவும் இதனால் ஆண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேற்படி ஆய்வானது மரபணுவில் வை நிறமூர்த்தங்கள் இன்மை காரணமாக குறைந்த விந்தணுக்கள் உற்பத்தி மற்றும் விந்தணுக்கள் உற்பத்தியற்ற நிலையிலுள்ள 3 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்டது.
Post a Comment