36 000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை
Monday, May 5, 20140 comments
நைஜீரியாவிலிருந்து லண்டனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானத்தின் வர்த்தக வகுப்பில் இருந்த பெண்ணொருவர் நடுவானில் குழந்தையை பிரசவித்தார். அந்த விமானம் அவசர கால நிலைமையின் கீழ் ஸ்பெயின் தீவொன்றில் சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது.
நைஜீரிய அபுஜா நகரிலிருந்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணித்த பிரித்தானிய எயார்வேய்ஸ் விமானமே இவ்வாறு ஸ்பெயின் தீவான பல் டி மல் லோர்காவில் அவசரகால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டது.
உஜுன்வா ஒஸெஹ் (31) வயது என்ற மேற்படி பெண்ணுக்கு 26 வார கர்ப்பநிலையில் குழந்தை பிரசவமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உஜுன்வாவின் 31ஆவது பிறந்த தினம் அவரது குழந்தை பிரசவமான அதே தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
36000 அடி உயரத்தில் விமானம் பறந்த வேளை பிரசவமான அவரது குழந்தைக்கு மைக்கேல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இரு குழந்தைகளின் தாயான உஜுன்வா தனது மகள் நளெடின்மாவுடன் லண்டன் சென்று அங்கிருந்து விடுமுறை சுற்றுலாவொன்றுக்காக அமெரிக்க வாஷிங்டன் நகரை சென்றடைய திட்டமிட்டிருந்த போதே அவருக்கு குழந்தை பிரசவமாகியுள்ளது.
தற்போது பல்மிடி மல்லோகா தீவிலுள்ள சொன் எஸ்பாஸஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறைமாதத்தில் பிறந்த குழந்தையான மைக்கேல் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து பராமரிக்கப்படுவதாகவும் அக்குழந்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை அந்த மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Post a Comment