நெதர்லாந்து அரசியல்வாதியின் புதல்வரும் இஸ்லாத்தைத் தழுவினார்
Thursday, May 1, 20140 comments
நெதர்லாந்து அரசியல்வாதியான அர்னோல்ட் வான் டூர்ன் இஸ்லாத்தை தழுவி ஒரு வருடமாகின்ற நிலையில் அவரது புதல்வரான இஸ்கன்டரும் இஸ்லாத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார்.
22 வயதான இஸ்கன்டர் டுபாயில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய மாநாடு ஒன்றின்போது மேலும் 37 பேரோடு இணைந்து இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.
நெதர்லாந்தின் வலது சாரி சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவிருந்து நபிகளாரை அவமதிக்கும் வகையில் பித்னா எனும் தலைப்பிலான திரைப்படத்தை தயாரிப்பதற்கு அர்னோல்ட் வான் டூர்ன் துணை போயிருந்தார். இருப்பினும் பின்னர் இஸ்லாத்தைப் பற்றி தேடி அறிந்து கொண்ட அவர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டதுடன் நபிகளாரை சிறப்பிக்கும் வகையிலான திரைப்படம் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டார்.
இந்நிலையிலேயே அர்னோல்ட் வான் டூர்னின் புதல்வரும் தற்போது இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். இது தொடர்பில் இஸ்கன்டர் கருத்து வெளியிடுகையில், எனது தந்தை இஸ்லாத்தை தழுவிய பின்னர் அவர் முன்னரை விடவும் மகிழ்ச்சியாகவும் சமாதானமாகவும் வாழ்வதை நான் உணர்ந்தேன். அதுமட்டுமல்லாது எனது உற்ற நண்பனான யூனுஸின் நடத்தைகள் என்னைக் கவர்ந்தன. யூனுஸ் இஸ்லாத்தை மிகச் சரியாக பின்பற்றுகின்ற ஒரு முஸ்லிமாக நான் கண்டேன். அதன்பால் நான் ஈர்க்கப்பட்டேன்.
குர்ஆனை படிக்கத் தொடங்கிய நான் சிறந்த இஸ்லாமிய பிரசாரகர்கள் நடத்தும் வகுப்புகளிலும் தொடர்ச்சியாக கலந்து கொண்டேன் என்றார்.
Post a Comment