மகிந்த அரசுக்கு கொண்டாட்டம் மக்களுக்கு திண்டாட்டமான காலம் என வவுனியாவில் வானைப்பிளக்கும் கோசங்கைள எழுப்பியவாறு மே தின ஊர்வலம் இடம்பெற்றது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியுடன் இணைந்து சுதேசிய சிறு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம், வவனியா சிறு வியாபாரிகள் சங்கம், வவுனியா நன்னீர் மீனவர் கூட்டுறவுச் சங்கம் ஸ்ரீலங்கா ஜனரய சுகாதார சேவைகள் சங்கம், வீதிப் பராமரிப்புத் தொழிலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தொழிலார்கள், தேசிய கலை இலக்கியப் பேரவை, மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, என்பன ஏற்பாடு செய்திருந்த இவ் ஊர்வலத்தில் அரசியல் கைதிகளை வாசாரணை செய் அல்லது விடுதலை செய், வடக்கு கிழக்கில் அவலப்படும் எண்பதனாயிரம் விதவைகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கு, அத்தியாவசிய பொருட்களின் விலையை குறை, அன் ஒற்றுமைக்கு பங்கத்தை ஏற்படுத்தாதே போன்ற கோசங்களை இவ் ஆhப்பாட்டத்தில் கலந்து கொண்டவாகள் எழுப்பியதுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
Post a Comment