எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் எத்தனிக்கின்றன. புதிய தமிழ் ஈழத்திற்கான அடித்தளத்தினை இவர்கள் போட்டு விட்டனர் என்று தேசிய சுதந்திர முன்னணியின் இரண்டாவது பேராளர் மாநாட்டில் அமைச்சருமான விமல் விரவன்ச தெரிவித்தார்.
புதிய கொள்கைத் திட்டத்தின் படி புதிய அரசியல் யாப்பினை உருவாக்கி சுய ஆட்சிக்கு அரசு இணங்காவிடின் நாம் தனித்துப் பயணிக்கவும் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் இரண்டாவது பேராளர் மாநாடு நேற்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இடம் பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
வடக்கையும் கிழக்கினையும இணைத்து பலம்மிக்கதொரு தமிழ் ஈழத்தினை உருவாக்கும் நோக்கத்திலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கரங்களைப் பிடித்துள்ளது. உரிமைகளை பெற்றுத்தருவதாக கதைகளை கூறி முஸ்லிம் மக்களின் ஆதரவினை பெற முயற்சிக்கின்றது.
ஜெனிவாவிற்கு அறிக்கை சமர்ப்பித்தமை வடக்கில் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களை நியமித்தமை மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பின் ஒன்றினைந்த பேச்சுக்கள் அனைத்துமே அவர்களின் எதிர்காலத் திட்டத்தினை வெளிப்படுத்துகின்றது.
எதிர்கால அரசியலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பதும் பாராளுமன்றின் தனி இராச்சியத்தினை கொண்டு செல்வதுமே இவ் இரு கட்சியினரினதும் நோக்கமாகும். இதற்கான அடித்தளத்தினை இவர்கள் மறைமுகமாக போட்டுள்ளனர். வடக்கு கிழக்கினை தனி ஈழமாக மாற்றுவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டை காப்பாற்ற .வேண்டுனெம மக்கள் இந்த அரசாங்கத்தை ஆதரித்தனர். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாட்டை கட்டியெழுப்ப மக்கள் அரசை ஆதரித்தனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் இவை அனைத்தையும் இழக்கும் வகையில் இந்த அரசு பயணிக்கக் கூடாது. இராணுவ வீரர்கள் கட்டிக் காப்பாற்றிய இந்த நாட்டை சர்வதேச சக்திகளுக்கு தாரை வார்த்துவிடக் கூடாது.
எனவே உறுதியான பௌத்த சிங்கள மற்றும் ஏனைய மதங்களையும் இனத்தவர்களையும் காப்பாற்றும் வகையில் சர்வதேச தலையீடுகள் இல்லாத வகையில் புதிய கொள்கைத் திட்டங்களை உள்ளடக்கியதென புதியதொரு அரசியல் யாப்னினை உருவாக்க வேண்டும். குறிப்பாக இன்று இந்த மாநாட்டில் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களான:
1. நாட்டில் ஒருமைப்பாட்டினை உறுதிப்படுத்தும் ,இனவாதத்தை தோல்வியடைய செய்யும் மத நல்லிணக்கம் ,நல்லாட்சி ஆகியவற்றை கொண்ட புதிய அரசியல் அமைப்பினை மக்களிடம் முன்வைத்தது.
2. சர்வதேச அழுத்தங்களுக்கு அமைவாக தேசிய ஒற்றுமை தொடர்பாக எவ்வித உள்ளக விசாரணைகளையும் மேற் கொள்ளக் கூடாது என அரசிற்கு ஆலோசனை விடுக்கும் அதே வேளை குறித்த விசாரணைகளை மேற் கொள்ளுமாறு சில அரசியல் சக்திகள் அரசிற்கு விடுக்கும் அழுத்தங்களை வண்மையாக கண்டிக்கின்றது.
3. இலங்கையில் மூவின மக்கள் மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட13 திருத்தச் சட்டத்தை திருத்துவதோ அது தொடர்பாக எந்தவொரு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தவோ கூடாது. அத்தோடு அதிகாரத்தை பகிர்வது தொடர்பாக தென்னாபிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் தலையீட்டிற்கு இடமளிக்ககூடாது.
4. நாட்டின் கலாச்சார பாரம்பரிய தொடர்பில் பூரண அவதானம் செலுத்துவதுடன் மதத்தலைவர்கள், ஊடகங்கள், கல்வி உள்ளிட்ட நிறுவனங்களை உள்ளடக்கிய மன்றமொன்றினை உருவாக்கி அதன் ஊடாக கிடைக்கப்பெறும் பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டும். அதே போன்று கசினோ சூது உள்ளிட்ட அனாச்சாரங்கள் மேலோங்க இடம்மளிக்கா வண்ணம் சட்டம் மீள் உருவாக்கப்பட வேண்டும் .அத்தோடு கசினோ முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகையை வழங்க கூடாது.
5. மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் மத அடிப்படை வாத அமைப்புக்களின் செயற்பாட்டினை தடை செய்வதுடன் குறித்த அமைப்புக்களுக்கு எதிரான சட்டத்தை அமுல்ப்படுத்த வேண்டும்.
6. இலங்கை அரசியல் அமைப்பினை மீறும் வகையில் இனவாதத்தை தூண்டி வெளிநாடுகளிடம் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கெதிராக தராதாரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
7. ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேச யுத்த குற்ற விசாரணை பொறிமுறையை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளோரை நாட்டிற்கு வருகைத் தரு இடமளிக்கக்கூடாது.
உள்ளிட்ட 12யோசனைகளை உள்ளடக்கிய வகையில் அரசியல் யாப்பொன்றினை உருவாக்க வேண்டும். இவற்றில் ஏதெனும் முறைப்பாடுகள் அரசுக்கு வருமாயின் அதனை விவாதித்து தீர்மானங்களை எட்டி உகந்த அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்க வேண்டும். எனவே இவற்றிற்கு அரசாங்கம் இறங்கினால் மட்டுமே நாம் அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் துனை நிற்கலாம். மாறாக எம்மையும் எமது கொள்கைகளையும் பொருட்படுத்தாது அரசாங்கம் தனித்து செயற்படுமாயின் நாமும் தனித்து செயற்படவேண்டிய நிலை ஏற்படும். ஒரு காலத்திற்கு இரண்டு பாடல்களை பாட முடியாது. எனவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் எமக்கு முரண்பாடாக இருப்பின் நாமும் தனித்து பயணத்தினையே மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment