தம்புள்ளையில் இருப்பது பள்ளிவாசலே அல்ல; தகரக் கொட்டில்! - இனா­ம­லுவே தேரர்

Saturday, May 24, 20140 comments



தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அங்­கி­ருந்து அகற்றி தம்­புள்ளை நகர  பிர­தே­சத்தில் அமைத்துக் கொள்­வ­தற்கு எனது எதிர்ப்­புகள் இல்லை. புதி­தாக அமைக்­கப்­படும் பள்­ளி­வா­ச­லுக்­கான முதல் நன்­கொ­டையை நானே வழங்க தீர்­மா­னித்­துள்ளேன். இது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கிறேன் என தம்­புள்ளை ரங்­கிரி ரஜமகா விகாரையின் விகாராதி­பதி இனா­ம­லுவே சுமங்­கல தேரர்  தெரி­வித்தார்.

தொலைபேசி மூலம் வழங்­கிய விஷேட நேர்­கா­ணலின் போதே அவர் மேற் கண்­ட­வாறு கூறினார்.

அவ­ரு­ட­னான முழு­மை­யான 
நேர்­கா­ணலை இங்கு தரு­கிறோம்.

நேர்காணல்: ஏ.ஆர்.ஏ.பரீல்

கேள்வி: தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அங்­கி­ருந்து அகற்­று­வ­திலேயே நீங்கள் ஆர்­வ­மாக இருக்­கி­றீர்­களே?

இனா­ம­லுவே தேரர்: அதனை பள்­ளி­வாசல் என்று கூறா­தீர்கள். பள்­ளி­வாசல் ஒன்­றுக்­கான அடை­யா­ளங்­களே அங்கு இல்லை. அமனா தக­ரத்­தி­லான ஒரு கொட்­டகை என்றே நான் கூறுவேன்.அது தற்­கா­லிக கூடாரம். தக­டு­க­ளினால் கொட்­ட­கை­யொன்று அமைத்துக் கொண்டு அதற்கு ஜும்ஆ பள்­ளி­வாசல் என்று பெய­ரிட்டுக் கொள்­வ­தென்றால் அது இஸ்லாம் மதத்­துக்குச் செய்யும் நிந்த­னை­யாகும்.

இதேபோன்றுதான் தம்­பு­ள்ளையில் கோவில் ஒன்று இருக்­காத இடத்தில் தக­ரத்­தினால் கொட்­டகை ஒன்று அமைத்து இந்து கோவில் என்று பெயர் வைத்து சிலை­யொன்­றி­னையும் வைத்துக் கொண்­டார்கள். இதற்கு கோவில் என்று ஊட­கங்கள் பிர­சாரம் செய்­தன. பௌத்த புனித பூமியில் வேறு­மத ஸ்தலங்கள் இருப்­பதை அனு­ம­திக்க முடி­யாது. இத­னாலே கோவில் அங்­கி­ருந்து அகற்­றப்­பட்­டது.

கேள்வி:  இல்லை. அது முஸ்­லிம்­களின் பழமை வாய்ந்த பள்­ளி­வாசல். முஸ்லிம்களைப் பொறுத்தவரை தகரத்தில் அமைந்தாலும் தங்கத்தில் அமைந்தாலும் அது பள்ளிவாசல்தான். நீங்கள் சொல்­வதை ஏற்றுக் கொள்ள முடி­யாது. 

இனா­ம­லுவே தேரர் : இல்லை. அது பள்­ளி­வா­சலே இல்லை. நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கோழிப் பண்­ணை­களைப் பார்த்­தி­ருப்­பீர்கள். ஒரு கோழிப் பண்­ணை­யி­லுள்ள கோழி­களை அகற்­றி­விட்டு அதற்கு பள்­ளி­வாசல் என்று கூறு­வதைப் போன்­றுள்­ளது உங்கள் கூற்று. தம்­புள்­ளையில் பள்­ளி­வாசல் என்று சொல்­வது இஸ்லாம் மதத்தை அவ­ம­திப்­ப­தாகும்.

கேள்வி: தம்­புள்ளை பள்­ளி­வாசல் சட்ட பூர்­வ­மா­னது. முஸ்லிம் சமய கலா­சார திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இனா­ம­லுவே தேரர்:  ஏற்றுக் கொள்ளமாட்டேன். பிர­தேச செய­லாளர் காரி­யா­லயம், நக­ர­ சபை, புத்­த­சாசன மற்றும் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சு என்­பன பள்­ளி­வாசல் கட்­டிடம் சட்டவிரோ­த­மா­னது என ஏற்றுக் கொண்­டுள்­ளன.

கேள்வி: பள்­ளி­வாசல் இல்லை என்று கூறும் நீங்கள் அங்கு முஸ்­லிம்­களின் சமய கட­மைகள் நடை­பெ­று­கி­றது என்­பதை ஏற்றுக் கொள்­கி­றீர்­களா?

இனா­ம­லுவே தேரர்:  ஆம். ஏற்றுக் கொள்­கிறேன். சமய கட­மைகள் நடை­பெ­று­கின்­றன. ஆனால் தம்­புள்ளை ரஜ­மகா விகா­ரைக்கு 'பௌத்த தேவா­லகம்' சட்­டத்தின் கீழ் காணி வழங்­கப்­பட்­டுள்­ளது. இது பௌத்­தர்­களின் புனித பிர­தே­ச­மாகும். அந்­தக் ­கா­ணி­யிலே நீங்கள் பள்­ளி­வா­ச­லொன்று கூறும் தகர கொட்­டகை அமைந்­துள்­ளது. இந்­தக் ­கா­ணியில் வேறு மத நிலை­யங்கள் இருக்கக் கூடாது.

கேள்வி: பள்­ளி­வா­ச­லுக்கு தொடர்ந்து சவால்­களை விடுத்துவரு­கி­றீர்கள். முஸ்­லிம்கள் பீதியில், கவ­லையில் உள்­ளார்கள். பிரச்­சி­னை ­களை சுமு­க­மாக தீர்த்துக் கொள்ள முடி­யு­மல்­லவா?

இனா­ம­லுவே தேரர்: ஆம். சரி­யாகச்  சொன்­னீர்கள். தம்­புள்ளை விவ­காரம் ஒரு சமய பிரச்­சினை . இரு தரப்பு மதத்­த­லை­வர்­களும் ஒன்று கூடி இந்தப் பிரச்­சி­னையை சுமு­க­மாக தீர்த்­தி­ருக்­கலாம். கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கலாம். சம­யங்கள் எந்த சம­ய­மென்­றாலும் வன்­மு­றை­களைப்  போதிக்­க­வில்லை. பௌத்த மதம் கரு­ணையை வலி­யு­றுத்தும் மதம். ஆனால் இங்கு அந்த மதத்­த­லை­வர்­களின் ஒன்று கூட­லுக்கு வாய்ப்பு அளிக்­கப்­ப­ட­வில்லை. இது அர­சியல்மய­மாக்­கப்­பட்­டு­விட்­டது.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னையில் மூன்றாம் தரப்­புக்கள் தலை­யிட்­டுள்­ளன. அர­சியல் மற்றும் வேறு இயக்­கங்கள் சம்­பந்­தப்­பட்­டுள்­ளன. விருப்பு வாக்­கு­களை அதி­க­ரித்துக் கொள்­வதே அர­சியல் வாதி­களின் இலக்­காக இருக்­கி­றதே தவிர உண்­மையில் பிரச்­சி­னைக்கு சுமு­க­மான தீர்வு பெற்றுக் கொள்­வ­தல்ல. இத­னா­லேயே பிரச்­சி­னைகள் தீர்­வில்லை. நாளுக்கு நாள் அதி­க­ரித்­துள்­ளன. மூன்றாம் தரப்­புக்கள் இதனை உட­ன­டி­யாக நிறுத்திக்  கொள்ள வேண்டும்.

கேள்வி: பள்­ளி­வாசல் சட்டவிரோ­த­மா­ன­தென நீங்கள் தானே கூறி வரு­கி­றீர்கள்? முஸ்லிம் சமு­தாயம் ஏற்றுக் கொள்ள மறுக்­கி­றதே?

இனா­ம­லுவே தேரர்:  இல்லை. நீங்கள் அப்­படிச் சொல்ல வேண்டாம். மிக அண்­மையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கலீல் மௌலவி என்­றொ­ருவர் என்னை வந்து சந்­தித்தார். அவர் அகில இலங்கை இஸ்­லா­மிய ஆலோ­சகர். அவ­ரிடம் நான் என்­னி­ட­மி­ருந்த காணி உறு­திகள், வரை படங்­களைக் காட்­டினேன்.

இந்தப் பள்­ளி­வாசல் சட்டவிரோ­த­மா­னது என்பதை அவரும் ஏற்றுக் கொண்டார். இந்த இடத்தில் பள்­ளி­வாசல் இருப்­ப­தற்கு நான் இட­ம­ளித்தால் தம்­புள்ளை விகாரை வர­லாற்றில் நான் பெரும் குற்­ற­மி­ழைத்­த­வ­னாக கரு­தப்­ப­டுவேன்.

கேள்வி: பெரஹரா மாவத்தை என்று பள்­ளி­வா­சலை ஊட­றுக்கும் வகையில் புதிய பாதை­யொன்றை அமைத்து வரு­கி­றீர்­களே? இதனால் தானே இத்­தனை பிரச்­சி­னை­க­ள் ஏற்பட்டுள்ளன?

இனா­ம­லுவே தேரர்:  ஆம். பாதை­யொன்று அமைக்க ஆரம்பித்து பள்­ளி­வாசல் அதற்கு தடை­யாக இருப்­பதால் அவ்­வி­டத்தில் நிறுத்தி வைத்­தி­ருக்­கிறேன். பள்­ளி­வாசல் தடை நீக்­கப்­பட வேண்டும்.பாதை அபி­வி­ருத்­திக்­காக பள்­ளி­வா­சலை உட­ன­டி­யாக அகற்றித் தர வேண்டும். அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்கு பள்­ளி­வாசல் தடை­யாக இருப்­பதை நல்லதாக நான் கரு­த­வில்லை.

கடந்த வருடம் இந்த அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்­காக  150 மில்­லியன் ரூபாவை அரசு ஒதுக்­கி­யது. பள்­ளி­வாசல் தடை­யாக இருந்தால்  அந்தப் பணம் திறை­சே­ரிக்கு திருப்பி அனுப்­பப்­பட்­டது. இந்த வரு­டமும் பணம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இந்தப் பணம் அபி­வி­ருத்­திக்குப் பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். இத­னா­லேயே பாதை அபி­வி­ருத்­தியை மேற்­கொண்­டுள்ளேன்.

கேள்வி:  வீதி அமைப்பது வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை மற்றும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­களின் வேலை அல்லவா? அதனை நீங்கள் ஏன் முன்­னெ­டுக்க வேண்டும்?

இனா­ம­லுவே தேரர்:  வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபையின் வரை­ப­டத்­துக்­கி­ணங்­கவே பணி­கனை முன்­னெ­டுத்து வரு­கிறேன். தம்­புள்ளை அஸ்­கிரி ரஜமகா­ வி­கா­ரையின் அதி­பதி என்ற வகையில் புனித பூமியில் அபி­வி­ருத்திப் பணி­களை என்னால் முன்­னெ­டுக்க முடியும். இது பற்­றி­யாரும் அலட்டிக் கொள்ளத் தேவை­யில்லை.

கேள்வி: நீங்கள் புதிதாக அமைத்த பாதையினூடாக பெரஹரா ஊர்வலம் நடத்தவுள்ளீர்களே? பள்ளிவாசலை கடந்து செல்லும் போது பிரச்சினைகள் எழுந்தால்?

இனா­ம­லுவே தேரர்:  இல்லை நான் நியாயமானவன். அநீதிகள் ஏற்படும்போது தான் அதற்கெதிராகப் போராடுபவன். யாருக்கும் தீங்கு செய்பவனல்ல. அமைதியாகவே எமது பெரஹரா ஊர்வலம் பள்ளிவாசலைக் கடந்து செல்லும்.

கேள்வி: முஸ்லிம் சமூகத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

இனா­ம­லுவே தேரர்:  மௌலவிகள், சமயத் தலைவர்கள் அமைதியான முறையில் அவர்கள் பள்ளிவாசல் என்று கூறும் தகர கொட்டிலை அகற்றித் தரவேண்டும். அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

கேள்வி: தம்புள்ளை நகரில் வேறு நான்கு இடங்களில் புதிதாக பள்ளிவாசலைக் கட்டுவது தொடர்பில் ஆலோசிக்கப்படுகிறது. அவ்வாறு வேறு இடத்துக்கு இப் பள்ளிவாசலை இடமாற்றுவது பற்றிய உங்கள் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ளலாமா?

இனா­ம­லுவே தேரர்:  தாராளமாக. அப்படி புதிய பள்ளிவாசலைக் கட்டுவதாக இருந்தால் அதற்கான முதலாவது நிதி அன்பளிப்பை நான் தான் வழங்குவேன். ஆனால் எமது புனித பூமிக்குட்பட்ட பிரதேசத்தில் ஒருபோதும் பள்ளிவாசலை அமைக்க நான் சம்மதிக்கமாட்டேன்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham