முஸ்லிம்கள் தொடர்பில் கதைக்க அ.இ.ம.கா விற்கு அருகதையில்லை- ஐ.தே.க. பதிலடி

Tuesday, May 27, 20140 comments


இலங்கை வாழ் முஸ்லிம்கள் தொடர்பில் ஐக்கியதேசியகட்சி எப்போது கரிசனையுடனேயே இருக்கிறது. முஸ்லிம்களை கட்டிக்கொடுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் தொடர்பில் அருகதையே கிடையாது என மேல்மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் ஐ.தே. கட்சிக்கே வாக்களிக்கின்றனர். ஆனால் இன்று வட கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் பேரினவாதிகளின் இனவாத செயல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றபோது ஐ.தே.கட்சி  ஏன் பேசாமல் இருக்கிறது? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வை.எல்.எஸ்.ஹமீடினால் அறிக்கையொன்று வெ ளியிடப்பட்டது. இதற்கு பதிலளிக்குமுகமாகவே முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதச் செயற்பாடுகள் தொடர்பில்,  எமது கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில்  பெறுமதிமிக்க உரையொன்றை நிகழ்த்தினார். பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த பேரினவாத அமைப்புக்கள் மேற்கொண்ட பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல், ஹலால் எதிர்ப்பு நடவடிக்கை போன்றவற்றினூடாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை தனது உரையில் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்த உரையை இரண்டு அரசியல்வாதிகள் கடுமையாகக் குழப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் முஸ்லிம் பிரதிநிதிகளாவர். ஒருவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீன். மற்றவர் பிரதியமைச்சர் அப்துல் காதராவார். ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும்போது, அமைச்சர் றிசாத் பதியுத்தீன் சத்தமாகக் குரலெழுப்பி அந்த உரையினை இடையூறு செய்து கொண்டிருந்தார். இதன்போது, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் றிசாத் பதியுத்தீனைப் பார்த்து 'முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக வன்முறைகள் மற்றும் பிரச்சினைகள் எழுந்த போதெல்லாம் ஓடி ஒளிந்து கொண்ட நீங்கள் இன்று உங்களின் மக்களுக்காக குரல் கொடுக்கும் என்னை எதிர்த்து இங்கு கத்திக் கொண்டிருக்கிறீர்கள்' என கடும் தொனியில் காட்டமாகக் கூறினார்.

பொதுபலசேனா போன்ற பௌத்த பேரினவாத அமைப்புக்களால், முஸ்லிம்கள் மீது புரியப்பட்ட அநீதிகள் குறித்து ரணில் விக்கரமசிங்க பேசிய போது, பாராளுமன்றத்தில் இடையூறு செய்தவரே இந் றிசாத் பதியுத்தீன். அதேபோன்று எமது கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம், எம்.எச்.ஏ. ஹலீம் உட்பட பல சிங்கள தலைவர்கள் பல் பாராளுமன்றத்தில்  பல சந்தர்பங்களின்போது அரசாங்கத்திம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்போது அமைச்சர் ரிஷாடும் அந்தக்கட்சி காரர்களும் வாய்மூடியிருந்தனர். தற்போது ஐ.தே.க. ஒன்றும் செய்யவில்லை என்று மக்களை திசைதிருப்ப முயற்சிக்கின்றனர்.

இது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மற்றுமொரு தேர்தல் நாடகமாகும். எதிர் வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் அரசின் திட்டத்தை இவர்கள் முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தலில் ஐ.தே.க ஊடக இரு பிரதிநிதித்துவம் கிடைத்தது. இம்முறை மீண்டும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் சாத்தியம் இருக்கின்றது. இதற்கெதிராக அரசு புதிய வியூகத்தை உருவாக்கி வருகிறது. அமைச்சர் ரிஷாடின் கட்சி மூலம் ஐ.தே.க மீது முஸ்லிம்களின் நம்பிக்கையை இல்லாது செய்வதன் மூலம் அரசின் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என நினைக்கிறது.

அதற்காக இனவாதத்தை அ.இ.ம.கா. கையில் எடுத்துள்ளது. இதேவேளை, பொது பல சேனாவுக்கு எதிராக அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. வீனாக அறிக்கை விட்டு மக்களை திசைதிருப்பாது, ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தின் போது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ரிஷாட் பதியுதீன் பேச வேண்டும். ஜனாதிபதிதான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எவே அமைச்சரவையில் அவர் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

அதனை விட்டு விட்டு ஏதே முஸ்லிம்கள் மீது அக்கறையாக இருப்பது போல் பூச்சாண்டி காட்டுகின்றனர். உண்மையில் முஸபுலிம் சமூகத்தின் மீது அக்கறையிருந்தால் பிரச்சினைக்கான தீர்வுகளை காண்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இன்றைய அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு அவர்களை பாதுகாப்பதிலேயே குறியாக இருக்கக் கூடாது.

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்காக துனிவுடன் பேச வேண்டும். அதைவிட்டுவிட்டு ஊடகங்களுக்கு அறிக்கைகொடுத்து பலன் கிடையாது.
அளுத்கமை, மாவனெல்லை பிரச்சினைகள் ஏற்பட்டது தொடர்பில், நானும் ஐ.ம.முன்னணி தலைவர் மனோ கனேஷனும் கடந்தவாரம் மாகாண சபையில் உரையாற்றியிருந்தோம். ஆனால் அ.இ.ம.கா உறுப்பினர் என்ன செய்தார் என்பது தொடர்பில் ஒருமுறை மீள்பரிசீலனை செய்து பாருங்கள்  என்றார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham