இஸ்லாத்தை தழுவிய பிக்குவை குண்டர்கள் குழு கடத்தியது
Wednesday, May 28, 20140 comments
ஐந்து வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை தழுவி பௌத்த குருவொருவர் இனம் தெரியாத குண்டர்கள் குழுவொன்றினால் நேற்று கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் கண்டி குற்றத்தடுப்பு பிரிவில் முறையிடப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி தெரிவிக்கப்படுவதாவது குறிப்பிட்ட நபர் முன்னாள் பௌத்த குருவாக இருந்து இஸ்லாம் மதத்தை தழுவி முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தந்தையாவார்.
இவர் கம்பளையில் நகரசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார். சம்பவத்தினமன்று அவர் தொலைபேசி மூலம் கண்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்கள் வியாபாரம் சம்பந்தமாக அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
கம்பளையிலிருந்து முச்சக்கர வண்டியில் கண்டிக்கு வருகை தந்த அவரை கண்டி நகரில் வைத்து பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளனர். முச்சக்கர வண்டிச்சாரதி குறிப்பிட்ட நபரின் கம்பளையிலுள்ள மனைவிக்கு சம்பவத்தை தெரிவித்தார். அவரது மனைவி முதலில் கம்பளை பொலிஸுக்கு முறைப்பாடொன்றை செய்வதற்கு முயற்சித்தாலும் சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளமையினால் கம்பளை பொலிஸார் கண்டி பொலிஸுக்கு முறையிடுமாறு பணித்ததையடுத்து கண்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment