பாகிஸ்தானிய மண்ணில் போட்டிகளில் பங்கேற்க வருமாறு இலங்கை கிரிக்கட் அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
பாகிஷ்தானிய கிரிக்கட் சபையின் தலைவர் நஜாம் சேத்தி இந்த அழைப்பை விடுத்துள்ளார்
பாகிஸ்தானில் தற்போது சர்வதேச கிரிக்கட் போட்டிகளை நடத்துவதற்கான ஏதுநிலை ஏற்பட்டுள்ளது
எனவே இந்த அழைப்பு விடுத்துள்ளதாக நஜாம் குறிப்பிட்டுள்ளார்
அண்மையில் இது குறித்து பாகிஸ்தானிய ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியதாகவும நஜாப் குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாகிஸ்தானில் திவிரவத அச்சுருத்தல் நிலவி வந்த நிலையில், அந்நாட்டிற்கு உதவும் முகமாக இலங்கை அணி அங்கு கிரிக்கெட் சுற்றுப்பயனம் மேற்கொண்டது. இதன் போது தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலங்கை அணி பயணித்த பஸ் வண்டி இலக்கானது.
இந்நிலையில் பகிஸ்தானுக்கு ஏனைய நாடுகள் கிரிக்கெட் சுற்றுப்பயனத்தை தவிர்த்து வருகின்றன. எனினும் உயர்மட்ட அரசியல் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை அணி மீண்டும் அந்நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கின்றது.

Post a Comment