மத விவகாரங்கள் தொடர்பில் தனியான அலகினை உருவாக்க முடியாது – ஐ.தே.க
Thursday, May 1, 20140 comments
மத விவகாரங்கள் தொடர்பில் விசாரணை நடாத்த தனியான காவல்துறை அலகினை உருவாக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. பொதுவான காவல்துறையிலிருந்து தனியான அலகுகளை உருவாக்குவது சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டியுள்ளது. 17ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டதனைத் தொடர்ந்து நாட்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
18ம் திருத்தச் சட்டம் ஜனாதிபதியின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்தாக குறிப்பிட்டுள்ளது. மத விவகாரங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தெரிவின் அடிப்படையிலேயே விசாரணை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. எனவே, இந்த காவல்துறையினால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆளும் கட்சியினர் என்றால் எவ்வித தண்டனையும் விதிக்கப்பட போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment