ஊவா மாகாண தேர்தல் தொடர்பில் விசேட கூட்டம்
Monday, April 28, 20140 comments
உத்தேச ஊவா மாகாணத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தலைமையிலான கலந்துரையாடல் ஒன்று, எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்காக ஊவா மாகாணத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும், மாகாண சபையின் அரசாங்க உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சந்திப்பில் கலந்து கொள்ள தமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட மலையக மக்கள் முன்னணி, வெளியில் இருந்து அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வருகிறது.
இதன் ஒரே ஒரு மாகாண சபை உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே அரசாங்க உறுப்பினர்களின் இந்த மாநாட்டுக்கு ஏ.அரவிந்த்குமார் விசேடமாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண சபையின் ஆட்சி காலம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது.
தேர்தல் தினைக்களத்தின் பேச்சாளர் ஒருவரது தகவல், ஜுன் மாத இறுதிக்குள் ஊவா மாகாண சபைக்கான தேர்தலை நடத்த தேர்தல் திணைக்களம் தயாராகும் என்று அறியமுடிகிறது.
Post a Comment