ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரது வாக்குமூலத்தை பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.
நேற்று (20) மாலை தனது வாக்குமூலத்தை பொலிஸார் பெற்றுக் கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன அத தெரணவிற்கு தெரிவித்தார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்கள் அஜித் பீ பெரேரா, அஜித் மான்னப்பெரும, நலின் பண்டார ஆகியோரது வாக்குமூலங்களும் பொலிஸாரினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மத்தல விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகத்தை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடந்த 17ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் துரித விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Post a Comment