மெர்ஸ் வைரஸ் - சவுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி
Monday, April 28, 20140 comments
சவுதியில் மெர்ஸ் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை நூரை கடந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான உயிர்களை காவுக் கொண்ட 'சார்ஸ்' கிருமிக்கு இணையான 'மெர்ஸ்' கிருமியின் தாக்கம் பரவி வருகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த நோய் கிருமி கண்டறியப்பட்டாலும் இதற்கான மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் 'மெர்ஸ்' மர்ம நோய் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில் ஓமான் நாட்டில் உள்ள சிலவகை ஒட்டகங்களின் மூலம் இந்நோய் பரவியிருக்கலாம் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் இந்த நோய் முதலில் காணப்பட்டதால் இதற்கு மெர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சாதாரண சளியுடன் இணைந்த தொற்று வகையைச் சேர்ந்த இந்த நோய்த்தொற்று ஏற்பட்டால் வெகுவிரைவில் சிறுநீரக இழப்பு ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment