சிங்களவர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு தேவையில்லை: மேர்வின்
Monday, April 28, 20140 comments
சிங்கள குடும்பங்கள் குறிப்பிட்ட தொகை குழந்தைகளை மாத்திரமே பெற்றுக்கொள்கின்றமை வருத்தமளிக்கிறது. இதனால், இலங்கையில் அமுலில் இருக்கும் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதாக மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
அத்துடன், கூடியளவு பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்குத் தேவையான பால்மா மற்றும் ஆடைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கம்பஹா, கிரிந்திவெல பிரதேசத்தில் 8 குழந்தைகளைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு உதவுவதற்காகச் சென்றுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, அங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Post a Comment