இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்கள் அதிகரிப்பு
Monday, April 28, 20140 comments
இந்த வருடத்தில் முதல் காலாண்டு பகுதியில் எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளான 51 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தொடர்பான கட்டப்பாட்டு நிலையம் வெளியிட்டுள்ளது.
கடந்த வருடத்தில் குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மேலதிகமான 7 பேர் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வருடம் 6 லட்சம் பேர் எயிட்ஸ் தொடர்பான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்த அமைப்பின் இயக்குனர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் இன்று வரையில் 70 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையில் 1996 பேர் இதுவரையில் எச் ஐ வி தொற்றுக்கு உள்ளானவர்கள் என இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த தொகை மேலும் அதிக அளவில் காணப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment