மஹிந்த நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தால் பொது வேட்பாளரை நிறுத்தமாட்டோம்; சோபித தேரர்
Tuesday, April 29, 20140 comments
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிப்பாரேயானால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் அவசியமில்லை என்று மாதுளுவாவே சோபித தேரர் கூறினார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரத்தை வழங்கும் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவது பொது வேட்பாளரின் பொறுப்பு. அரசை வீழ்த்தும் எண்ணம் எமக்கில்லை எனவும் தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெறும் பொது வேட்பாளர் ஆறு மாதங்களே ஜனாதிபதி பதவியில் இருப்பார். ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்கி விட்டு பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டில் நடைமுறையில் இருக் கும் அரசமைப்புச் சட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சிஇ மகா நாயக்க தேரர்கள்இ அரசியல் கட்சிகள்இ சிவில் அமைப்புகள் எதிர்க்கின்றன.
மஹிந்த சிந்தனையிலும் நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யாரைப் பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து இதுவரை தீர்மானிக்க வில்லை. பொது வேட்பாளர் தொடர்பாக பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது என்றார்.
Post a Comment