கோட்டாபாயவின் தீர்மானத்திற்கு முஸ்லிம் கவுன்ஸில் வரவேற்பு
Monday, June 30, 20142comments
சமூக இணைய வலையமைப்புக்களை பயன்படுத்தி இன மத வன்முறைகளைத் தூண்டும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் அறிவித்திருந்தார். பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவின் இத்தீர்மானத்திற்கு முஸ்லிம் கவுன்ஸில் வரவேற்பு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளரின் இந்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளரின் தீர்மானமானது இலங்கை மக்களுக்கு மட்டுமன்றி சர்வதேச சமூகத்திற்கும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறெனினும், இந்தத் தீர்மானம் இதற்கு முன்னதாக எடுக்கப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
சமூக வலையமைப்புக்களுக்கு மட்டுமன்றி ஏனைய ஊடகங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களின் போது இந்த சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென முஸ்லிம் பேரவை, பாதுகாப்புச் செயலாளரிடம் கோரியுள்ளது.
பேருவளை அலுத்கம சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கூடிய விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
+ comments + 2 comments
மலையைக் கல்லி எலியைப் பிடித்த கதை என்பதா!
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதை என்பதா!
எதற்காக இவர்கள் பாதுகாப்புச் செயலரைச் சந்திக்கச் சென்றனர்? எதனைப் பெற்று வந்தனர்!
இதனைத்தான் முஸ்லிம்களின் தலைவிதி என்பதோ!
மலையைக் கல்லி எலியைப் பிடித்த கதை என்பதா!
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதை என்பதா!
எதற்காக இவர்கள் பாதுகாப்புச் செயலரைச் சந்திக்கச் சென்றனர்? எதனைப் பெற்று வந்தனர்!
இதனைத்தான் முஸ்லிம்களின் தலைவிதி என்பதோ!
Post a Comment