நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா?

Friday, June 19, 20150 comments


சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல், பருகாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது தான் நோன்பு என்பதாகும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் "நான் நோன்பாளி!'என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை,அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்!

(மேலும்) "எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலிலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்று அல்லாஹ் கூறுகிறான்) (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 1894)

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் பயன்படுத்துகின்ற மருந்து நிரப்பப்பட்ட குப்பிகள் அவர்களின் மூச்சிறைப்பை சமநிலை செய்வதற்குத் தான் பயன்படுத்தப்படுகின்றன. இது அவர்களுக்கு உணவாகவோ, பானமாகவோ அமைவதில்லை.

நோன்பு நோற்ற நிலையில் நாம் மூச்சு விட்டு இழுக்கும்போது காற்றில் கலந்துள்ள பல பொருட்களையும் சேர்த்து உள்ளிழுக்கிறோம். மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் போது அதில் உள்ள நச்சுப்பொருள்களயும் சேர்த்தே நாம் உள்ளிழுக்கிறோம். இதனால் நமது நோன்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.

இது போன்று தான் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு வாயு வடிவிலான மருந்தை உள்ளே செலுத்துவதற்காக மருந்துக் குப்பிகள் பயன்படுத்தப்படுகிறது. எனவே அவர்கள் அதனைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது உண்ணுவதிலோ பருகுவதிலோ சேராது.

ஆனால் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நோன்பு நோற்பதினால் உயிருக்கு ஆபத்து, அல்லது உடல்நிலை மோசமாகும் நிலை ஏற்படும் என்றால் நோன்பை விட்டு விட்டு நோய் தீர்ந்த பின் வசதியான நாட்களில் விடுபட்ட நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம்.

தீராத நோய் உடையவர்கள் ஒவ்வொரு நோன்பிற்குப் பகரமாகவும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham