இம்ரான் கான் இரகசிய திருமணம்?
Wednesday, December 31, 20140 comments
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் , தற்போதைய அரசியல் வாதியுமான இம்ரான் கான் , பி.பி.சி. செய்திச் சேவையில் பணியாற்றும் பெண்ணொருவரை இரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
62 வயதான இம்ரான் கான் , 41 வயதான பெண் ஊடகவியலாளரான ரேஹம் கானை குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருமணமாகி விவகாரத்து பெற்றவரான ரேஹம் கானுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இம்ரான் கானும் திருமணமாகி விவாகரத்தானவர்.
இத்தகவலை இம்ரான் கான் இதுவரை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. எனினும் இச் செய்தியானது பாகிஸ்தான் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment