சிராணி பண்டாரநாயக்க மைத்திரிபாலவுக்கு ஆதரவு?

Saturday, December 6, 20140 comments

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர், சிராணி பண்டாரநாயக்க பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்து உள்ளதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைநீக்கத்திற்கு குறிப்பாக அவர் அதிகளவு ஆதரவளிப்பதாகவும் அரசியல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


பொதுவேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தின் உருவாககூடிய சட்டசிக்கல்களை சிரானி கையாள்வார், எனவும் எனினும் அவர் பிரச்சார மேடைகளில் தோன்றுவாரா என்பது தெரியாது எனவும் தகவல்வெளியாகியுள்ளது.


சில மாதங்களுக்கு முன்னர் மாதுளவா சோபித தேரர் ஏற்பாடுசெய்த அரசியல் நிகழ்வொன்றில் அவர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை அவர் இழந்த உரிமைகளை தேர்தலில் வெல்லும் பட்சத்தில் மீள ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பாக எதிர்கட்சிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மைத்திரிபால சிறிசேன சிராணி குறித்து இதுவரை பகிரங்கமாக எதனையும் தெரிவிக்காத போதிலும், முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா இழந்த உரிமைகளை ஏற்படுத்திக்கொடுப்பதாக தெரிவித்துள்ளார்
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham