எமது ஜனாதிபதி 25 லட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவார் - அஸ்வர்

Thursday, December 18, 20140 comments


மஹிந்தவே நாட்டின் தலைவராக வேண்டும் என்று ஜப்பன், மலேசியா ,சீனா ,சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளும் எல்லாம் சொல்கின்றன.“ஆசியாவின் தலைவர் “ என்று பாங் கீ மூன் கூட சொன்னார். எனவே எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தேர்தலில் 25லட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.

இன்று முல்லைத்தீவில் நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதி தேர்தல் 2015 ஐந்தாவது பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தா

இங்கு ஏ.எச்.எம்.அஸ்வர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்-உங்களுக்கு நன்றாக ஞாபகமிருக்கும் 30 வருட காலமாக முல்லைதீவு கிளிநொச்சி மட்டுமல்ல வட கிழக்கு மாகாண மக்கள் காடுகளில் தான் வாழ்ந்தார்கள் .அவர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை .பயத்தோடு தான் வாழ்ந்தார்கள் .கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒழிந்து ஒழிந்து பயந்த தான் பிற பகுதிகளை வந்தடைந்தார்கள்.

நாம் அனைவரும் ஒரே இனம், ஒரே தாய் நாடு, ஒரே பிள்ளை என்று கூறுபவர் தான் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். “நாமிருக்கும் நாடு நமதென்பதை அறிவோம்”என பாரதியார் பாடியுள்ளார். நாம் வாழும் நாடு தமிழர்களின் நாடு!, முஸ்லிம்களின் நாடு! சிங்களவர்களின் நாடு என பாடுகிறார் எமது ஜனாதிபதி.

இன்று வடபகுதியில் எல்லாம் காபர்ட் பாதை .ஆண்களும் பெண்களும் ஜாலியாக அமர்ந்து கொழும்புக்கு வரலாம். 24 வருடங்களாக தடைபட்டிருந்து யாழ்தேவி மணமகள் தற்சமயம் யாழ்ப்பாணம் வருகிறாள். அவ்வாறே "மஹிந்த மணமணமகன் வந்தார். பொருள் கோடி தந்தார்" என்றே இன்று பாடத்தேன்றுகின்றது.

இன்று டக்லஸ் தேவானந்தாவும் ஜனாதிபதியுடனிருக்கிறார். ஆறுமுகம் தொண்டமானும் ஜனாதிபதியுடன். அவ்வாறே அமைச்சர்களான ரிஷாத் பதியுத்தீன் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் இன்று ஜனாதிபதியுடன் இருப்பது குறித்து சந்தோஷப்படுகிறேன்.

சரித்தி நாயகனான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை இன்று சீன பல்கலைக்கழக மாணவர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. யுத்தமில்லா பூமி –என் சொந்த பூமி என கண்ணதாசன் பாடினான். வனம் ஒன்றேபூமி ஒன்றே தாய்நாடு ஒன்றே என்று எமது ஜனாதிபதி மஹிந்த பாடுகிறார். அன்னாரின் கரங்களை காப்போம்.

தேன் மொழி தமிழ் மொழி அந்த தமிழ்மொழியில் ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய ஒரேயொரு தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தான். மஹிந்தவே நாட்டின் தலைவராக வேண்டும் என்று ஜப்பன் மலேசியா சீனா சிங்கப்பூர் இந்தியா ஆகிய நாடுகளும் எல்லாம் சொல்கின்றன. அவரால் இந்நாட்டை காக்க முடியும்.

“ஆசியாவின் தலைவர் “ என்று பாங் கீ மூன் கூட சொன்னார். எனவே எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தேர்தலில் 25லட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham