அமீர் அலி எம்.பி.யாக 12 ஆம் திகதி சத்தியப்பிரமாணம்

Friday, December 5, 20140 comments


முன்னாள் தேசியபட்டியல்  பாராளுமன்ற உறுப்பினர்  அஸ்வரின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அமீர் அலி நியமிக்கப்பட்டுள்ளதோடு அவர் எதிர்வரும்

12ஆம் திகதி  சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொருளாளர் அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்

ஐ.ம.சு.மு. ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கமைய தேசியபட்டியல்   பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தனது எம்.பி. பதவியை அண்மையில் ராஜினாமா செய்திருந்தார். அந்த வெற்றிடத்திற்கே அமீர் அலி நியமிக்கப்படுகின்றார். அத்தோடு பிரதியமைச்சு பெறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆளும்கட்சியுடன் அ.இ.ம.கா. நடாத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham