மூழ்கும் கப்பலில் ஏறி பயணிக்க மாட்டேன்: லக்ஸ்மன் கிரியல்ல
Thursday, November 6, 20140 comments
மூழ்கும் கப்பலில் ஏறி பயணிக்க மாட்டேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கட்சி தாவுதல் தொடர்பில் வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் நோக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதாக வெளியான செய்திகளில் உண்மை கிடையாது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் எவ்வித உத்தேசமும் எனக்கு கிடையாது. மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலுக்குள் எவரும் பாய மாட்டார்கள்.
ஆளும் கட்சிக்குள் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் ஆளும் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர் என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment