டீ.ஏ. ராஜபக்ஷவின் ஞாபகர்த்த 'சிசுர' புலமைபரிசில் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி
Friday, November 7, 20140 comments
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் முக்கியஸபுதரான அமரர் டீ.ஏ. ராஜபக்ஷவின் 47 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு 'சிசுர' புலமைபரிசில் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் தங்கல்லை இன்று (07) ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச்சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் 200பேருக்கே இந்த ‘சிசுர’ புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட டீ.ஏ. ராஜபக்ஷவின் ஞாபகர்த்த கட்டுரை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் ஜனாதிபதியின் கரங்களால் பரிசில்கள் வழங்கப்பட்டன.
டீ.ஏ. ராஜபக்ஷவின் ஞாபகர்த்த களனி பல்கலைக்கழக கலை பீடாதிபதி பேராசிரியர் பெட்ரிக் ரத்நாயக்க இந்நிகழ்வில், டீ.ஏ. ராஜபக்ஷவின் ஞாபகர்த்த உரையை நிகழ்த்தினார்.
தினமின பத்திரிகையின் பிரதம ஆசிரியர் காமினி ஜயலத்தினால் தொகுக்கப்பட்ட “மெதமுலன மஹருக” அமரர் டி.ஏ. ராஜபக்ஷவின் புகைப்படங்களை கொண்டு தொகுக்கப்பட்ட நூல்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கையளிக்கப்பட்டன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment