முஸம்மில் முஸ்லிம் சமூகத்தின் துரோகி - லாபிர் ஹாஜியார்

Thursday, November 20, 20140 comments


தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான முஸம்மிலை ஒரு முஸ்லிமாக ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் லாபிர் ஹாஜியார் தெரிவித்தார்.

தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் தொடர்பில் போசமாக விமர்சிக்கும் இவரின் மன நிலையை பரிசோதித்து பார்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டிடுக்கும் இவர், இனவாத அரசியல்வாதியான அமைச்சர் விமல்வீரவன்சவுடன் இணைந்து சமூகத்திற்கு எதிராக சதித்திட்டத்தை மேற்கொள்கிறார். முஸம்மில் முஸ்லிம்களின் துரோகி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவரை கண்டி பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் முஸ்லிம் என்றும் சொல்வதில் வெட்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham