ஜனாதிபதி தேர்தலில் நடுநிலை - முஸ்லிம் காங்கிரஸ்
Saturday, November 29, 20140 comments
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்த தரப்புக்கும் ஆதரவின்றி மௌனமாக இருக்க தீர்மானித்திருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் இதனைத் தெரிவித்துள்ளார்.
எமது செய்திப்பிரிவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது அவர் இந்த விடயத்தை கூறினார்.
அரசாங்கத்தில் இருந்து விலகும் எண்ணம் முஸ்லிம் காங்கிரஸிடம் இல்லை.
அதேவேளை எதிர்வரும் 10ம் திகதி எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகும் நிலையில், அதனையும் முஸ்லிம் காங்கிரஸ் ஆராயும்.
எனினும் இந்த விடயத்தில் எந்த தரப்பையும் குறிப்பிட்டு ஆதரிக்காதிருக்க தீர்மானித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
Post a Comment