மஹிந்தவுக்கு முழு ஆதரவு:ஏறாவூர் நகரசபையில் தீர்மானம்
Saturday, November 22, 20140 comments
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது முழு ஆதரவையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப் போவதாகக் கூறி, ஏறாவூர் நகரசபையில் விஷேட தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏறாவூர் நகரசபையின் மாதாந்த அமர்வு கடந்த வியாழக்கிழமை (20), உபதவிசாளர் எம்.ஐ.எம்தஸ்லிம் தலைமையில் நடைபெற்றது.
இந்த அமர்வில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் எம்.எல்ரெபு பாசம் பிரேரணையை முன்மொழிய உறுப்பினர் ஐ.ஏ.வாசித் வழிமொழிந்தார். அந்த உறுப்பினர்கள் அப்பிரேரணை மீதான உரையை நிகழ்த்தினர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் அபிவிருத்திப் புரட்சியை ஏற்படுத்தி, அனைவருக்கும் நிம்மதியை தரக்கூடிய வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளதுடன், பொதுமக்களுக்கு கூறமுடியாது, வெட்கப்பட வேண்டியளவு மாதாந்தக் கொடுப்பனவை இதுகாலவரை பெற்றுவந்த உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவை மனநிறைவானதாக அதிகரித்துள்ளதால் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகவும் உறுப்பினர் ரெபு பாசம் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment