பொதுபலசேனாவின் முகத்திரை கிழியப்பட்டுள்ளது: சேனாவுக்கு மைத்திரி தாக்குதல்
Thursday, November 27, 20140 comments
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொதுபலசேனா மறைமுகமாக ஆதரவளிப்பதன் மூலம் அவர்களின் முகத்திரை கிழியப்பட்டு உண்மையான முகம் வெளிக்காட்டப்பட்டுள்ளது என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பொது எதிரணிக்கு பின்னணியில் வெளிநாட்டு சதி இடம்பெறுவதாகவும் அதனை தாம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவுள்ளதாகவும் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொதுபலசேனா தெரவித்திருந்த நிலையிலேயே பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொதுபலசேனா ஆதரவளிப்பது தொடர்பாக எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அவர்களின் முடிவு எமக்கு முக்கியமில்லாத காரணத்தினாலேயே அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment