ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார் போரா ஆன்மீக தலைவர்
Thursday, October 2, 20140 comments
போரா முஸ்லிம் சமூகத்தின் உலக ஆன்மீகத் தலைவரான 53வது தாய் அல் முத்லக் - செய்த்னா சய்புதீன் சாஹிப், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி சந்திப்பு மிகவும் சுமூகமானதாக இருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போரா முஸ்லிம் சமூகத்தின் இன்றைய ஆன்மீக தலைவரின் தந்தையான காலஞ்சென்ற உயர்திரு செய்ட்னா அர்ஷத் ஹூசைன் சாஹேப் அவர்களின் இலங்கைக்கான இறுதி பயணம் மற்றும் அவர் நாட்டுக்கு வழங்கிய ஆசிர்வாதம் குறித்து ஜனாதிபதி இதன் போது நினைவுகூர்ந்துள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி தலைமையிலான இலங்கையின் துரித வளர்ச்சி மற்றும் பணிகளை ஆன்மீக தலைவர் பாராட்டியதாகவும் ஜனாதிபதியின் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment