தம்புள்ளை குண்டு தாக்குதல் அரசுக்கு எதிரான சதியே : அமைச்சர் பவுஸி
Monday, September 15, 20141comments
ஊவா மாகாண சபைதேர்தலில் 80 வீதமான முஸ்லிம்கள் அரசுக்கு ஆதரவாக இருக்கின்ற நிலையில் தம்புள்ளை பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையானது அரசுக்கு எதிரானவர்களின் சதியாகும் என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பவுஸி தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலின் மீது நேற்று இரவு 12.45 மணியளவில் கைக்குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊவா மாகாண சபைக்கு அரசாங்கத்தின் வெற்றிலை சின்னத்தில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்படாத நிலையில் அரசின் பங்காளி கட்சிகளான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கூட்டிணைந்து இரட்டையிலை சின்னத்தில் வேட்பாளர்களை களமிறங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

+ comments + 1 comments
அஸ்வர் சொல்கிறார் பட்டாசு வெடித்தது என்று இவர் கைகுண்டு தாக்குதலைப்பற்றி பேசுகிறார் ஹஸ்பியல்லாஹ்
Post a Comment