வலது காலை இழந்தார் அஜித் மான்னம்பெரும எம்.பி
Monday, September 8, 20140 comments
தெற்கு அதிவேக வீதியில் விபத்துக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னம்பெருமவின் வலது காலின் முழங்காலிற்கு கீழ் பகுதி சத்திர சிகிச்சை மூலம் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வலது காலிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தெற்கு அதிவேக வீதி விபத்தை அடுத்து அஜித் மான்னம்பெரும நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாது.
விபத்தில் போது காயமடைந்த மற்றுமொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment